குடிசை வீடானாலும் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பார்கள்..நமக்கென்று சொந்தமாக வீடு எப்போது வரப்போகிறதோ தெரியவில்லை என்று பெரும்பாலோனோர் கூறக் கேட்டிருப்போம். நாம் கட்டும் வீட்டினை வாஸ்துப்படி கட்டினால் தங்களுக்கு யோகம் வரும்
வாஸ்து படி ஒரு வீடு கட்டும் யோகம் யாருக்கு வரும்?
தீர்வு இதோ
நீங்கள் வாடகை வீட்டில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் வீடு வாஸ்து படி தென்மேற்கு மூலையில் பெட்ரூம் தென்கிழக்கு மூலையில் கிச்சனும் வடகிழக்கு மூலையில் அதிக காற்றோட்டமுள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இருக்கிறதா என்பதை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள்…
நீங்கள் வசிக்கும் வாடகை வீட்டை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துங்கள்.
தென்மேற்கு கிச்சன் இருந்தாலும் கிழக்குப் பகுதியில் ஜன்னல்கள் அமைப்பு இல்லாமல் இருந்தாலும் வீடு கட்டும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது .
வீட்டில் உள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேதியை முடிவு செய்து அந்த தேதிக்குள் நாம் புது வீடு வாஸ்து படி அமைத்து ஆரோக்கியமாக வாழ்வோம் என்ற நேர்மறை எண்ணங்களை அதிகமாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
நேர்மறை எண்ணங்கள் யாருடைய வீட்டில் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு கண்டிப்பாக வாஸ்துப்படி வீடு கட்டும் யோகம் அமைகிறது.